குமரிமாவட்டத்தில் காமராஜரின் சிலைக்கு 100 மேற்ப்பட்ட அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படங்களுடன் கர்ம வீரர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் செய்தி…..

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்…
நாடார் இயக்கத்தினர் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திமுக மேற்குமாவட்ட செயலாளர்.மனோதங்கராஜ் MLA தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட செயலாளர். ராஜேஷ் MLA தலைமையில் காமராஜரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
குமரிமாவட்ட அமமுக சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாவட்ட செயலாளர். செந்தில் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திமுக கிழக்கு மாவட்ட செயலாளர். என்.சுரேஷ்ராஜன் MLA தலைமையில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கொட்டாரத்தில் ஆஸ்டின் எம் எல் ஏ மற்றும் மாவட்ட செயலாளர். சுரேஷ்ராஜன் எம் எல் ஏ ஆகியோர் தலைமையில் திமுக கட்சியினர் முன்னிலையில் கொட்டாரம் ஜங்சனில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திட்டுவிளை பகுதியில் காமராஜரின் புகைப்படத்திற்கு ஆஸ்டின் எம் எல் ஏ மாலை அணிவித்தார்.உடன் திமுக பொருளாளர். கேட்சன் தோவாளை ஒன்றிய செயலாளர். நெடுசெழியன்,புதலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர். ஹெச்.வசந்தகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்…
பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர். பொன் இராதகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாவட்ட செயலாளர். திருமா வேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மதிமுக சார்பில் குமரிமாவட்ட செயலாளர். வெற்றிவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் நாகர்கோவில் காமராஜர் சிலைக்கு மாநில துணை தலைவர் வழக்கறிஞர் பி.சதிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர். அமுதன் தலைமையில் மாநகர செயலாளர். பெருவிளை மணிகண்டன் முன்னிலையில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மனித பாதுகாப்பு கழகம் சார்பில் நிறுவனர் ஜெயமோகன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பனங்காட்டுப்படை சார்பில் கட்சியின் ஆலோசகரும் ராக்கெட் ராஜாவின் அண்ணன் பால சிவநேசன் அவர்களின் தலைமையில் நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் ரஜிசிங் அவர்கள். மற்றும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
நாடார் சங்கத்தினர் மற்றும் அமைப்பினர் இணைந்து நாகர்கோவில் வேப்பமூடு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் முதல்வர் கர்ம வீரர் கல்விக்கு கண் திறந்த காமராஜரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடார் சங்கத்தினர் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் காமராஜரின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கியும் ஏழை எளியோருக்கு அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கியும் காமராஜரின் பிறந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடினர்….

குமரிமாவட்டத்தில் கன்னியாகுமரியில் அமைய பெற்றிருக்கும் காமராஜரின் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்,டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்கள்,குமரிமாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்… மற்றும் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலைக்கு காலை 7மணியில் முதல் இருந்தே மாலை அணிவித்து மரியாதை செலுத்த பல்வேறு அமைப்பினர் வருகை புரிந்து கொண்டிருந்தனர்..

இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாரை சாரையாக முழுக்கமிட்டு வந்தனர்…நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் நாடார் இயக்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் மாலை வரையிலும் மரியாதை செலுத்தி சென்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: