ஒப்புகை சீட்டை காட்டி ரேசன் அரிசி பெறலாம்

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை அட்டை பெறாதவர்கள், அதற்கான ஒப்புகை சீட்டை காட்டி இலவச ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். 

உணவுத்துறை அமைச்சர். திரு.காமராஜ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறியும் பரிசோதனை தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். நோய் எதிர்ப்பு சக்தியை அறிவதற்காக சென்னை மாநகராட்சியில் 12,000 பேருக்கு எலிசா டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டு, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கமாராஜ் கூறினார்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 81% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நியாயவிலைக் கடைகள் மூலமாக முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், அதன் தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: