குமரியில் இந்து கோவில்களில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி மறுப்பு!!!

கொரோனா தொற்று தொடர்பாக அரசின் புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வரும் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வழக்கமாக நடக்கும் கனிக்கானும் நிகழ்சிக்கு இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் உள்ளிட்ட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அமைதி இல்லை. – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு. கனிகாணும் பூஜைகள் முடிந்த பின் விதிமுறைகள் படி காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதி.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி அரசு பல புதிய கட்டுபட்டுகளை அமுல் படுத்தி உள்ளது. அந்தவகையில் கோவிகளில் திருவிழாக்கள் ரத்து செய்யபட்டு உள்ளது. இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் பூஜைகள், வழிபாடுகள் அதில் பக்தர்கள் அனுமதி ஆகியவை குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களுக்கும் வந்து உள்ள சுற்றறிக்கை படி, கொரோனா தொற்று தொடர்பாக அரசின் புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வரும் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வழக்கமாக நடக்கும் கனிக்கானும் நிகழ்சிக்கு இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் உள்ளிட்ட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அமைதி இல்லை என கூறபட்டு உள்ளது. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலை பொறுத்தவரை அதிகாலையில் சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பீலான தங்க குடங்களுடன் காய்கனிகள் சுவாமிக்கு படைக்கபட்டு வழக்கம் போல கணிகாணும் பூஜைகள் கோவில் தந்திரிகளால் பூஜைகள் முடிக்கபட்ட பின்னர் விதிமுறைகள் படி காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதி என சுசிந்திரம் தாணு மாலையசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது. அதிலும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் செல்லாமல் சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிந்து கட்டுப்பாடுகள் விதிமுறைப்படி குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்க படுவார்கள் என்றும் கூறபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: