குமரியில் தொடரும் போலீசாரின் பேஸ்புக் போலி பக்கங்கள் !!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் முகநூலை போன்று போலி முகநூல் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டம்-போலீசார் அதிர்ச்சி-
சிசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர். சத்ய சோபன் ஆகியோரின் பெயரில் தொடங்கப்பட்ட போலி முகநூல் சிக்கியது சம்பந்தப்பட்ட கும்பலை கண்டுப்பிடிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பெயரில் போலி முகநூல் தொடங்கி சில கும்பல் சமூக விரோத செயல்களில் ஈடுபட முயன்ற சம்பவங்கள் அரங்கேறியது.அந்த கும்பலை இதுவரை போலீஸ் தரப்பில் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் காவல் உதவி ஆய்வாளர்கள் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி பொதுமக்களை போலீஸ் தோணியில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. நாகர்கோவில் அடுத்துள்ள சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆறுமுகம் இவருடைய பெயரில் போலி முகநூல் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு முயற்சி நடைபெற்று உள்ளது.மேலும் பணம் பெற்றதாக உள்ள அடையாளங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பெயரில் முகநூல் தொடங்கி பணம் பறிக்கும் கும்பல் நடமாட்டத்தால் காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் பல்வேறு கோணங்களில் சம்பந்தப்பட்ட கும்பலை தேடி வருகின்றனர் அதேவேளையில் முகநூல் பெயரில் யாரும் பணம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: