200 ஆண்டு காலம் பல்வேறு தரப்பினரின் கல்விக்கு பாத்திரமாக விளங்கிய அச்சகத்தின் நினைவு தபால் தலை வெளியீடு!!!

தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயம் C.S.I டயோசீசன் அச்சகம் சார்பில் அச்சுத்திருப்பணியில் 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக குமரி C.S.I பேராய அச்சகத்தின் 200 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு நினைவு தபால் தலையை குமரி C.S.I பேராயர் தலைமையில் வெளியீடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயம் சார்ந்த சிஎஸ்ஐ டயோசீசன் அச்சகம் நிறுவப்பட்டது.

1806 ஆம் ஆண்டு அப்போதைய அருட்பணியாளர் தென் திருவாங்கூர் குமரி மண்ணில் காலடி பதித்த நேரத்திலிருந்து மக்களின் அறியாமை இருள் அகல கல்வியையும் அருள் பணியோடு செயல்படுத்த கல்வியாளர்களுக்கான பாடத்திட்டங்களின் தேவையை உணர்ந்து லண்டன் அருள்பணி சங்கத்துக்கு அச்சகம் அமைக்க கோரிக்கை விடுத்தார்.பின்னர் காலங்களின் மாற்றத்தில் 1821 ஆம் ஆண்டு தற்போதைய நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் திருவாங்கூர் மகாராணி வழங்கிய பயணியர் விடுதியில் அச்சகம் தொடங்கப்பட்டது. அதன்பின்பு இந்த அச்சகம் சமூகத்திற்காக பல கடமைகளையும் பல பரிமாணங்களில் ஏழை எளிய மக்களுக்காக ஒரு புரட்சி மாற்றமாக திகழ்ந்துள்ளது. அதைப் போற்றும் வகையில் இன்று அச்சகத்தின் 200 வது நினைவு நாளில் சிறப்பு தபால் தலை வெளியீட 200 ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட அந்த இயந்திரத்தின் புகைப்படத்தை தபால் தலையில் அச்சிட்டு சிறப்பு செய்துள்ளனர். மேலும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் வரும் காலங்களில் சிஎஸ்ஐ டயோசீசன் அச்சகம் செயல்படும் என்று குமரி சி.எஸ்.ஐ பேராயர்.ஏ.ஆர்.செல்லையா தெரிவித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: