குமரியில் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்லும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள்!!!

வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரம், மற்றும் சனிடைசர், முகக் கவசங்கள், மை உள்ளிட்டவை கொண்டு செல்லும் வகையில் 240 வாகனங்கள் குமரிமாவட்ட வட்டாச்சியர் வளாகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்கின்றன.

 குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 631 இடங்களில் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவற்றில் 274 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும், ஐந்து இடங்களில் உள்ள 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை  மற்றும் கணக்கிடப்பட்டுள்ளது. பதட்டமான மற்றும் மிக பதட்டமான பழக்கமான மொத்தம் 288 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 7 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். இவர்களில் மத்திய அரசின் சிறப்பு கலவர தடுப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதுடன் வாக்குப்பதிவு முடிந்த அதே வாகனத்தில் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த பணிகளில் போலீசார் துணை ராணுவத்தினர் முன்னாள் ராணுவத்தினர் ஓய்வு பற்ற போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல வாக்குச்சாவடிகளில் 50% துணை ராணுவத்தினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
 வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரம், மற்றும் சனிடைசர், முகக் கவசங்கள், மை உள்ளிட்டவை கொண்டு செல்லும் வகையில் 240 வாகனங்கள் குமரிமாவட்ட வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு செல்கின்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: