மருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து பாதுகாப்பு கருந்தரங்கம் குறித்த செய்தி..

மகாராஷ்டிரா, கொல்கத்தா, நாக்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அதிக தீவிபத்து ஏற்பட்டு நோயாளிகள் பலியானதை தொடர்ந்து நாகர்கோவிலில் தென் மண்டல அளவிலான தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை பணியாளர்களுக்கு திடீர் தீ விபத்தினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பதிற்கான கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடத்தப்பெற்றது.

தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி தமிழகமெங்கும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மருத்துவமனைகளில் தீயணைப்புக்கான பாதுகாப்பு குறித்த மருத்துவ கருத்தரங்கு நடத்த அறிவுறுத்தப்பட்டது.அதை தொடர்ந்து இன்று குமரிமாவட்டம் நாகர்கோவிலில் தென்மண்டல அளவிலான தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மருத்துவமனை பணியாளர்களிடம் கருந்தரங்கம் நடைப்பெறும் விதமாக 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலிருந்து பணியாளர்கள் வருகை தந்தனர்.அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி கருந்தரங்கம் அளிக்கப்பட்டது இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி கையாளுவது,மேலும் கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பு முறை மருத்துவம் அளிப்பது குறித்த கருந்தரங்கம் குமரிமாவட்ட தீயணைப்பு அலுவலர்.சரவணபாபு தலைமையில் நடைப்பெற்றது.உடன் நாகர்கோவில் தீயணைப்பு அலுவலர்.துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: