தனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ள வேட்பாளர்!!!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் ,நேற்று பாரத பிரதமர் கன்னியாகுமரியில் பேசிய பிறகு இன்றைக்கு அதனுடைய தாக்கம் அதிகமாக தெரிகிறது,மக்கள் எல்லோரும் மன மகிழ்வோடும்,மன நிறைவோடும் தன்னை வரவேற்று பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு அளிப்பேன் என்று உறுதியளித்து தன்னை வரவேற்பதாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்.எம்.ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்..

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்.எம்.ஆர் காந்தி இன்று நாகர்கோவில் ராமன்புதூர்,தளவாய்தெரு,புன்னைநகர்,கோணம் ஆகிய பகுதிகளில் வீடுவீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.செல்லும் இடமெல்லாம் தனக்கு வாக்களிக்க வேண்டும் உங்களின் நண்பர்களிடமும் தமக்கு அளிக்க சொல்ல வேண்டும் என்று உருக்கமாக வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார்.பின்னர் பேசுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.பாரத பிரதமர் கன்னியாகுமரியில் பேசிய பிறகு இன்றைக்கு அதனுடைய தாக்கம் அதிகமாக தெரிகிறது மக்கள் எல்லோரும் மன மகிழ்வோடும்,மன நிறைவோடும் தன்னை வரவேற்று பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு அளிப்பேன் என்று உறுதியளித்து தன்னை வரவேற்பதாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்.எம்.ஆர்.காந்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: