வெற்றி பெறுவது உறுதி.விஜய்வசந்த் !!!

மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர விட மாட்டேன்,குமரி மக்களின் வளர்ச்சியையும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்,தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து திட்டங்களையும் செய்து கொடுக்க முயற்சி செய்வேன், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதே போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களிடையே புது எழுச்சி தெரிகிறது என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.விஜய்வசந்த் நாகர்கோவிலில் செய்தியாளரிடம் தெரிவித்தார்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.விஜய்வசந்த் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்.சுரேஷ்ராஜன் ஆகியோர் இன்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பார்வதிபுரம் பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் அங்கிருந்து பள்ளிவிளை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும் மலர்களை தரையில் விரித்து அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நமது செய்தியாளரை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.விஜய்வசந்த்
மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன்,குமரிமக்களின் வளர்ச்சியையும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்,தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து திட்டங்களையும் கொண்டு வர முயற்சி செய்வேன், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதே போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களிடையே புது எழுச்சி தெரிகிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: