மீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தரப்படும். என்.தளவாய்சுந்தரம்!!!

குமரி முதல் கம்போடியா வரை இருக்கும் எனது சொத்துக்கு திமுக தலைவர்.ஸ்டாலின் தான் பங்குதாரர் என கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்.தளவாய் சுந்தரம் நக்கல் பேச்சு..

பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் வருவதற்கு மீனவ மக்களிடம் எதிர்ப்பு இருந்து வரும் வேளையில் கன்னியாகுமரி கீழமணக்குடி கடற்கரை பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கு முன்னதாக ஆதரவு தெரிவித்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமத்திற்கு வாக்கு கேட்டு வருவதை எதிர்க்கும் நிலையில் இன்று கன்னியாகுமரி , சங்குதுறை ,பள்ளம்,
அன்னைநகர் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் அதிமுக வேட்பாளர்.தளவாய்சுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.ஆனால் அங்கு அவருக்கு ஆதரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். பின்னர் மீனவ மக்களிடம் தான் வெற்றி பெற்று வந்தால் துறைமுகம் வரவே வராது என்றும் ஆணித்தனமாக தெரிவித்து யாரும் பொய் பிரச்சாங்களை நம்ப வேண்டாம் என வாக்கு சேகரித்தார்.அங்கு கூடியிருந்தவர்களிடம் கலந்துரையாடிய தளவாய்சுந்தரம் மீனவர்களுக்கு என்று தனி வங்கி ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: