குமரியில் மீனவ கிராமத்தில் செருப்பு தோரணம் கட்டி தொங்க விட்டு ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு!!!

பன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு கடற்கரை கிராமமக்கள் செருப்பு தோரணம் தொங்க விட்டு வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு –
இதனால் கீழ மணக்குடி கடற்கரை கிராமத்தில் தேர்தல் பிச்சாரம் செய்ய வரும் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய இணை அமைச்சர்.பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் .பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வாக்கு கேட்டு ஊருக்குள் நுழைய ஊர் மக்கள் தடை தெரிவித்து ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டி, செருப்புகளை மாலையாக கட்டி தொங்க விட்டு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டதிற்கு தொடர்ந்து கடற்கரை கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக கழகம் சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரியில் பன்னாட்டு மாற்று துறைமுக திட்டத்திற்கு அதிகாரபூர்வமாக பணிகள் ஒப்பந்த விளம்பரம் வெளியிட்டது.இதனால் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியில் களத்தில் இருக்கும் அதிமுக வேட்பாளர்கள் துறைமுகம் வராது என்றும் மத்திய அமைச்சர் அமிர்ஷா துறைமுகம் வரும் என்றும் துறைமுக அலுவலக குறிப்பில் மாறுதல் அறிவிப்பு இதுவரை வெளியிடாமல் இருப்பது அவர்களுகுள்ளே முரண்பாடான கருத்துகள் நிலவுவதை நாங்கள் எப்படி ஏற்று கொள்ளவது என கேள்வி எழுப்பி உள்ள கீழ மணக்குடி மீனவர்கள் இதனால் எங்கள் கிராமத்திற்குள் தேர்தல் பிச்சாரம் செய்ய வரும் பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர்பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர்.டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வாக்கு கேட்டு ஊருக்குள் வரகூட்டாது என தெரிவித்து உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல துறைமுக திட்டத்திற்கு ஆதரவான யாரும் வாக்கு கேட்டு ஊருக்குள் வரகூடாது என தெளிவகாக அறிவித்து உள்ளனர். அதற்கு கண்டனம் தெரிவித்து கீழ மணக்குடி கடற்கரை கிராமம் முழுவதும் கருப்பு கொடி கட்டி, செருப்புகளை மாலையாக தொங்க விட்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: