காட்டு யானைகள் நடமாட்டம்..குமரிமாவட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு!

குமரிமாவட்ட வனப்பகுதிகளில் நடைப்பெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு யானை போன்ற பெரிய வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதாக தகவல்.மேலும்கணக்கெடுப்பு பணியில் ஈடுப்பட்ட 26 குழுக்களும் வனவிலங்குகள் பற்றி கணக்கெடுத்து வழங்கிய விபரங்களின் மொத்த அடிப்படையில் விலங்குகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

குமரிமாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று நிறைவுப்பெற்றுள்ளது. கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பூதப்பாண்டி, அழகியபண்டியபுரம்,
வேளிமலை,களியல், குலசேகரம் ஆகிய ஐந்து வனச்சரகங்களில் 2021-ம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்கெடுப்பு இந்த மாதம் 25ம் தேதி முதல் மூன்று நாட்களாக நடைபெற்றது.இந்த கணக்கெடுப்பின் போது யானை,காட்டுமாடு, காட்டுபன்றி,கரடி,மலபார் அணில், மிளா,உடும்பு,முள்ளம்பன்றி,செந்நாய்,எரும்பத்தின்னி,கருமந்தி,வரையாடு,கேளையாடு, மரநாய், காட்டுமுயல்,காட்டுக்கோழி ஆகிய வனவிலங்குகளை வனத்துறை கணக்கெடுப்பின் போது பல்வேறு குழுக்களால் நேரடியாக கண்டுள்ளனர்.மேலும் புலி,சிறுத்தைகள், விருது போன்ற மாமிச உண்ணிகளின் எச்சில்களும் கண்டறியப்பட்டுள்ளது.
மற்றும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுப்பட்ட 26 குழுக்களும் வனவிலங்குகளை கணக்கெடுத்து வழங்கிய விபரங்களின் அடிப்படையில் குமரிமாவட்ட வனப்பகுதிகளில் 2021 ம் ஆண்டுக்கு முந்தைய வனவிலங்குகளின் எண்ணிக்கைகளிலும் தற்போதைய வனவிலங்குகளின் இருப்பு கூடுதல்,குறைவு என்ற கணக்கு தெரியவரும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதே போல் இந்த வனவிலங்குகள் கணகெடுப்பு பணிக்கு தங்களை ஈடுப்படுத்திக்கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் துணிச்சலையும் அவர்களின் பணியையும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: