அனைத்து இந்திய ரஜினி மக்கள் கட்சி உதயம்!!!!

கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ் .ராஜன் அறிக்கை.
தமிழக மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தலைவர் ரஜினி எப்படியாவது கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி தமிழ் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று எதிர் பார்த்து கொண்டு இருந்தனர்.ஆனால் தலைவர் ரஜினியின் அறிவிப்பு அனைத்து மக்களுக்கும் அவரை இன்னும் உயிருக்கு உயிராய் நேசிக்கும் ரசிகர் களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.அரசியலுக்கு வராததற்கு அவர் அளித்த உருக்கமான விளக்கம் ஏற்றுக் கொள்ள கூடிய துதான். இருப்பினும் எதிர்பார்ப்பு வலியை தந்து உள்ளது. தலைவர் படம் ஒரு தீபாவளி அன்று ரிலீஸ் ஆகாவிட்டாலே அதை கருப்பு தீபாவளி என்று நாங்கள் கொண்டாடாமல் இருந்து இருக்கிறோம் நாங்கள் அரசியல் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பதை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை.இது ரசிகர்களுக்கு மட்டும் வருத்தம் இல்லை. தமிழக மக்கள் அனைவருக்கும் தான் எமாற்றம் மக்கள் சேவைகள் பல வழிகளில் நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வந்தாலும் அரசியல் கட்சி என்ற அடையாளம் அதற்கு இருந்தால் அதற்கு தனி மதிப்பு உண்டு. எனவே தலைவர் கட்சி தொடங்காத நிலையில் நாங்கள் தமிழ் நாட்டின் தென்கோடி எல்லையான குமரி மாவட்டத்தில் இருந்து நாங்கள் புதிய கட்சியை தொடங்கி உள்ளோம்.தலைவர் ரஜினிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தொண்டர்கள் உள்ளனர் எனவே நாங்கள் அனைத்து இந்திய ரஜினி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் குதித்து மக்கள் சேவைகள் செய்ய முடிவு செய்து உள்ளோம். கட்சி கொடி சின்னம் கொள்கை தொடர்புடைய மற்ற விசயங்கள் பற்றி தமிழ் நாட்டின் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் அனைவரிடமும் கருத்து கேட்டு விரைவில் கன்னியாகுமரியில் வைத்து அறிவிப்பு வெளியிடுவோம் என்று குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைத்தலைவர்.ஆர் எஸ் ராஜன் தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: