காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை பொங்கல் விழாவிற்கு குமரி வந்த நடிகை கஸ்தூரி பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 1008 பானையில் பெண்கள் பொங்கலிடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கலந்து கொண்ட பொங்கல் விழா குமரி மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சினிமா நடிகை கஸ்தூரி கல்லூரி மாணவிகளுடன் குத்தாட்டம் போட்டு சிறப்பு
நடனம் ஆடி அசத்தினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி குமரி நடைப்பெற்ற கலப்பை மக்கள் இயக்கம் நடத்திய பொங்கல் அனைத்து சமயத்தை சார்ந்த பெண்களுக்கான சமத்துவ பொங்கல் பெண்களின் சம உரிமைக்கான பொங்கலாக பார்க்கப்படுவதாக தெரிவித்தார்,தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட அடையாளத்தை இழந்து விட்டது என்பது கசப்பான உண்மை காமராஜருடைய காங்கிரஸ் இப்போது இல்லை அதேபோல் நேருவோட காங்கிரஸ் மத்தியில் கூட இல்லை ராகுல் காந்தியின் காங்கிரஸ் தான் இருக்கு அதுவும் அமோதி தொகுதியில் கூட இல்லை அவர்களுடைய அடையாளத்தை மீட்டு எடுக்கவில்லை என்றால் உத்தர பிரதேசத்தில் காணமல் போனது போல்போய்விடும் என்றும் வரலாற்றுக்கு காங்கிரஸ் தேவையாக இருந்திருக்கலாம் இப்போதைய வாழ்வாதாரத்திற்கு காங்கிரஸ் உடைய செயல்பாடு தேவையில்லை என்று மக்கள் ஒவ்வொரு தரமும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் அலையன்ஸ் நம்புவதைவிட மக்கள் மேல ரிலையன்ஸ் வைச்சாங்கனா அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்று தெரிவித்தார்.மேலும் ரஜினி தன்னை இன்று அரசியலுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் என்று சொல்வதற்கு பதிலாக அன்று நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்றும் ரஜினிக்கு எதிராக பேசக்கூடிய குறிப்பிட்ட இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினி தவறானவர் என்று சொன்னதை ரஜினி இன்று அவர்கள் சொன்னது சரி என்று நிரூபித்து விட்டார்.இந்த முடிவு ரஜினியின் ரசிகையான தனக்கு வயித்தெரிச்சலாக இருப்பதாக தெரிவித்தார்,வேளாண் மசோதவில் விவசாயிகளின் போராட்டத்தை பார்க்கும் போது அரசு தரப்பு நிலைப்பாட்டை கொஞ்சம் மென்மைப்படுத்த வேண்டும் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டது உண்மையான விவசாயியா இல்லை வேறு நபர்களா என்று பார்ப்பதை விட்டு 50 உயிர்கள் பலியானதை தொடர்ந்தும் போராட்டம் நடக்கு என்றால் அவர்கள் பக்கம் இருக்கம் நியாயத்தை கருத்தில் கொண்டு சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் முதல் அவசர கால கோரிக்கையாக முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: