பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் இளைஞர்களிடம் கலாச்சாரத்தையும் சமுதாய சீர்க்கேட்டையும் முன்னின்று செய்வது அரசியல் கட்சி தலைவருக்கு ஏற்புடையதல்ல? ரஜியின் முதல் பெண் ஆதரவாளர் அரசியல் கட்சி தலைவி கருத்து!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் இளைஞர்களிடம் கலாச்சாரத்தையும் சமுதாய சீர்க்கேட்டையும் முன்னின்று செய்வது அரசியல் கட்சி தலைவருக்கு ஏற்புடையதல்ல ரஜியின் முதல் பெண் ஆதரவாளர் அரசியல் கட்சி தலைவி பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவி.மூ.ராஜேஸ்வரி பிரியா நாகர்கோவில் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் வசிப்போர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா தமிழகத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆண்களுக்கு இணையாக வருங்காலங்களில் அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும், அரசியலில் ஊழல் இருப்பதால் அதிகாரிகளிடமும் ஊழல் இருக்கிறது ஆகவே லஞ்ச லாவண்யம் அற்ற நிலையை தான் முன்னிறுத்துவதாகவும், கல்வி சீர்திருத்தம்,விவசாய வளர்ச்சி,பொருளாதார உயர்வு உள்ளிட்டவற்றை மேம்படுத்த அனைவரும் இணைந்து அரசியல் கடந்து பாடுபட வேண்டும் என்று தனது அரசியல் கொள்கை நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்,பின்னர் ரஜினியின் அரசியில் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு ரஜினி அறிவித்த நிலைப்பாட்டில் தொடந்தால் அரசியலில் ஒருபெண்ணாக ரஜியின் தலைமையை ஆதரிப்பேன் என்று தெரிவித்தார்.அதேபோல் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 ஆண்டுகளாக எதிர்த்து வருவதாகவும் இது கலாச்சாரத்தையும் சமுதாய சீர்க்கேட்டை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க முன்னின்று அரசியல் கட்சி தலைவரும் ஒரு கலைஞராக தொகுத்து வழங்குவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.வேளாண் மசோதவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஏன் மத்திய அரசு சரியான விளக்கம் கொடுக்க தயங்குகிறது கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் விவசாயிகளை போராட விடுவது சரியல்ல என்றும் அரசு பள்ளிகளின் சமச்சீர் கல்வி மாணவர்களை பின்னோக்கி செலுத்துகிறது அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ கல்வி கொண்டு வந்தால் சமமான நிலையில் மாணவர்கள் தரம் உயரும் என்றும் நீர்மேலாண்மை திட்டத்தில் தமிழக அரசு தோல்வியை தழுவியுள்ளது,விவசாயிகள் தங்களின் விதைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய தகவல் தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.. இதில் குமரிமாவட்ட அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீட் , மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், மாவட்ட துணை தலைவர் சேக் அன்சாரி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: