குமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது .

குமரி மாவட்டம் சாமி தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது.இங்கு வைகாசி , ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் எளிய முறையில் தொடங்கியது . கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் . கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4மணிக்கு முத்திரிபதமிட்டு திருநடை திறத்தல் , அய்யாவுக்கு பணிவிடை , 5 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி , தொடர்ந்து கொடியேற்றம் போன்றவை நடந்தன . பால பிரஜாபதி அடிகளார் கொடியை ஏற்றி வைத்தார்.மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் பணிவிடையும் , மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் நடைப்பெற்றது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை , மாலை நேரங்களில் பணி விடை , மதியம் உச்சி படிப்பு , தொடர்ந்து தலைமைப்பதியின் உள்பகுதியில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும் சமூக இடைவெளியுடன் எளிய முறையில் நடைபெறும் . வருகிற 28 ந் தேதி எட்டாம் திருவிழாவும் , 31ந் தேதி 11 ம் திருவிழாவும் நடைபெறும் என்று சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: