காவலர் சுப்பிரமணியனின் உடல் நல்லடக்கம்,காவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பரப்ப படுகின்ற தகவல்களுக்கு டிஜிபி திரிபாதி அவர்கள் மறுப்பு…

வீரமணம் மரணம் அடைந்த காவலர் சுப்பிரமணியனின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இன்று அடக்கம் செய்யப்பட்டது..

ரவுடியை பிடிக்க சென்ற போது வெடிகுண்டுக்கு பலியான காவல் வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது இறுதிச் சடங்கில் டிஜிபி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்..

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வெடிகுண்டு வீசி ரவுடியால் கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள பண்டாரவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் நடைப்பெற்றது. இந்நிலையில், நெல்லை சரக அலுவலகத்தில் காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய டிஜிபி திரிபாதி அவர்கள் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு 50 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதில் பாரபட்சம் இல்லை என்று கூறினார். ரவுடி துரைமுத்துவை என்கவுன்டர் செய்வதற்காக காவல்துறையினர் அழைத்து செல்லவில்லை என்று கூறிய அவர், காவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறுவதற்கு மறுப்பு தெரிவித்தார். இச்சம்பவம் எதிர்பாராத நிகழ்வு என்றும் காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தமிழக காவல் துறை செய்யும் என்றும் கூறினார்.
இதனிடையே, பணியின்போது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுப்பட்டு செலுத்தப்பட்டது.அதே போல் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் காவல் சுப்பிரமணியனின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: