புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவிற்கு எதிராக குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம்
குமரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு – 2020 வரைவிற்கு எதிராக குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் கடிதம் அனுப்பும் போராட்டம் இன்று குமரி மாவட்டம் தக்கலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் வைத்து பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 400 கிராமக்கிளைகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்திட்ட கடிதத்தை மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பத்மநாபபுரம் நகர செயலாளர் திரு. மணி, திருவட்டார் ஒன்றிய செயலாளர் திரு. ஜான் பிரைட், தக்கலை ஒன்றிய செயலாளர் திரு. அருளானந்த ஜார்ஜ், வழக்கறிஞர் திரு. ஜாண்சன், வழக்கறிஞர் திரு. ஜெய தேவ், வழக்கறிஞர் திரு. சுபியான், வழக்கறிஞர் திரு. முதலார் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.