கொரோனா பாதிப்பை அரசு குறைத்து காட்டுவதாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள் நிறுவனம் முடக்கம்

ஈரான் அரசு கொரோனா பாதிப்பை வெகுவாக குறைத்துக் காட்டுவதாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவால் உயிரிழப்புகளுடன், வேறு பல நெருக்கடிகளும் ஏற்பட்டு வருகிறது. உண்மையான பாதிப்பை பெரும்பாலான நாடுகள் மறைப்பதாக பரவலாக பேசப்படுகிறது. 

இந்நிலையில் ஈரானில் உள்ள ஜஹான்-இ சனத் செய்தித்தாளில் அந்நாட்டின் கொரானா தடுப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினரான மொகமதுரெசா மஹபூபரின் பேட்டி வெளியிடப்பட்டது. அதில் ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பாதிப்பு எண்ணிக்கையை காட்டிலும், உண்மையான எண்ணிக்கை 20 மடங்கு அதிகம் என்று அவர்  கூறியிருந்தார். மேலும். 5% பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை மட்டுமே அரசு சொல்வதாகவும் தெரிவித்திருந்தார். அரசு தரும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தேர்தல் மற்றும் இஸ்லாமிய புரட்சி ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்தே அரசு கவலைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாளேடை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி அலுவலகம் மூடப்பட்டதாக செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மொகமத்ரெஸா சாதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஈரான் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் சிமா சதாத், மஹபூபர் பேட்டியில் கூறிய அனைத்தும் தவறானது என்றார். அவர் தேசிய கொரோனா தடுப்புக்குழுவில் உறுப்பினராகவும் இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: