கன்னியாகுமரியில் ஊரடங்கு காலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்தி வீடியோ….

கன்னியாகுமரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம்.பெண் உள்பட இருவர் கைது..

சர்வதேச சுற்றுலா ஸ்தலமான
கன்னியாகுமரியில் ஏராளமான மசாஜ் செண்டர்கள் உள்ளன.இந்நிலையில் கன்னியாகுமரி அருகே தெற்குகுண்டல் பகுதியில் பொது மக்கள் அதிகம் வசிக்கும் பிஸ்மி நகரில் பிளாக் மூன் என்ற பெயரில் ஒரு மசாஜ் செண்டர் இயங்கிவருகிறது.தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல் படகூடாது என அரசு அறிவிப்பு இருக்கும் நிலையில் அதை பொருட்படுத்தாமல்
சட்டத்திற்கு புறம்பாக இந்த மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அந்த ஊர்பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் செண்டரில் பாலியல் தொழில் நடைபெறுவது தெரிய வந்தது. இதையடுத்து ஒரு பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கிருந்து பின்வாசல் வழியாக இரண்டு ஆண்கள் காரில் ஏறி தப்பி சென்றள்ளனர்.

இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை சிறிது தூரம் தூரத்தி சென்றனர் ஆனால் அந்த இருவரையும் பிடிக்கமுடியவில்லை .மேலும் அங்கிருந்த பெண் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது அவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்துசென்றனர்….இதனால் ஊரடங்கு காலத்திலும் உலக சுற்றுலதலமான கன்னியாகுமரி பரபரப்பாக இயங்குவதாக ஊர்மக்கள் நகையாடிகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: