துறைமுகத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் ராட்சத கிரேன் எதிர்பாரவிதமாக கவிழ்ந்து கீழே விழுந்தது. பராமரிப்பு பணியின்போது நேரிட்ட விபத்தில் சிக்கி, 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வினய் சந்த் கூறியதாவது:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நிறுவனம், புதிதாக நிறுவிய 75 டன் எடையுள்ள ராட்சத கிரேனை சோதனை முறையில் இயக்கியபோது, அது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த புதிய கிரேன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டுவிட்டபோதிலும், ஒப்பந்ததாரா் மாறியதால் இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்துள்ளது.இப்போது புதிய ஒப்பந்ததாரா் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த கிரேனை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியை நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி, சனிக்கிழமையன்று அதிக எடையிலான சரக்குகளைக் கையாண்டு சோதனை ஓட்டம் நடத்தியபோது, அந்தக் கிரேன் தரையிலிருந்து பெயா்ந்து சரிந்து விழுந்தது. இதில் சிக்கி ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் ஊழியா்கள் 4 போ் உள்பட 11 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து விசாரிக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் குழு ஒன்றை அமைத்துள்ளது என்றும் கிரேன் சாய்ந்தபோது, அங்கு சுமார் 20 பேர் பணியில் இருந்ததாகவும், அவர்களில் பலர் காயமின்றி தப்பியதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சிலர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: