நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் இயங்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் நாகர்கோவில் தலைமை நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

குற்றவியல் சட்ட திருத்ததை கொண்டு வருவது தொடர்பாக ஆய்வுக்காக மத்திய அரசு நியமித்து உள்ள ஐவர் குழுவிடம் வழக்கறிஞர்கள் கருத்து கூற முடியாத நிலை இருப்பதால் அந்த குழுவை கலைக்க வேண்டும், வழக்றிஞர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்பதால் ஊரடங்கு காலத்திலும் அரசு அலுவலகங்கள் இயங்குவதை போல நீதிமன்றங்களும் இயங்க அனுமதிக்க வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதி மன்றம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழகறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதி மன்றம் முன் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினர்.இதில், குற்றவியல் சட்ட திருத்ததை கொண்டு வருவது தொடர்பாக ஆய்வுக்காக மத்திய அரசு நியமித்து உள்ள ஐவர் குழுவிடம் வழக்கறிஞர்கள் கருத்து கூற முடியாத நிலை இருப்பதால் அந்த குழுவை கலைக்க வேண்டும் என்றும் கொரோனாவால் கடந்த நான்கு மாதங்களாக அமுல்ப்படுத்தபட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை வழக்கறிஞர்கள் அனுபவித்து வருகின்ற சூழலில் ஊரடங்கு காலத்திலும் அரசு அலுவலகங்கள் இயங்குவதை போல நீதிமன்றங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: