நடிகர் சூரியா-கார்த்தி…சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குறித்து கருத்து

சுற்றுச்சூழலை காப்பதற்கு அனைவரும் மெளனம் கலைக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு” அச்சுறுத்தலாகவே அமையும் என்று, நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கருத்து பதிவிட்டுள்ளார். பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது எனக் கூறியுள்ள சூர்யா, காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க, நம் மௌனம் கலைப்போம் என தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார், அதில், “விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டிருக்கும் நண்பர் கார்த்தியின், குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: