ஜெயலலிதா அவர்களின் வேதா இல்ல ரகசியங்கள்….

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் வசித்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுடமையானது….
வேதா இல்லமானது சுமார் 10 கிரவுண்ட் 393 சதுரடி நிலப்பரப்பை கொண்டது .
ஒரு பகுதியில் வீடும் , மற்றொரு பகுதியில் தோட்டத்துடன் அந்த பங்களா அமைந்துள்ளது.
அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ .30 கோடி ஆகும்.ஜெயலலிதா அந்த போயஸ் கார்டன் வீட்டில் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து கட்டியுள்ளார்.பல லட்சம் ரூபாய் அந்த காலத்திலேயே அதற்கு செலவிடப்பட்டுள்ளது. அங்கு அசையா சொத்துக்களாக நிற்கும் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ .2.70 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . தனது தாய்க்காக அந்த வீட்டை ஜெயலலிதா பிரமாண்டமாக கட்டினார் என்று சொல்லப்படுகிறது. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு வேதா இல்லம் உலக அளவில் போயஸ் கார்டன் இல்லம் என புகழ் பெற்றது . ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்கள் ஏராளமாக அந்த பங்களாவில் உள்ளன . வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்த வீட்டில் சோதனை போட்ட போதுதான் ஜெயலலிதா வீட்டுக்குள் என்னென்ன இருக்கிறது என்பது வெளியில் தெரிந்தது.ஜெயலலிதா புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.குறிப்பாக ஆங்கில புத்தகங்கள் நிறைய வாசித்தார் . உலக அளவில் வெளியாகும் ஆங்கில புத்தகங்களை உடனுக்குடன் வரவழைத்து படித்து விடுவது அவரது வழக்கம்.வாழ்க்கை வரலாறு மற்றும் நாடுகளின் கட்டமைப்பு போன்ற புத்தகங்களை அவர் அதிகம் படிப்பார் . அந்த வகையில் அவரது வீட்டில் மிகப்பெரிய நூலகத்தை அமைத்துள்ளார்.
அந்த நூலகத்தில் ஜெயலலிதா வாசித்த 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன . ஜெயலலிதா சினிமாவில் நடித்த காலங்களில் விதவிதமாக உடைகள் அணிவதில் விருப்பம் கொண்டிருந்தார்.நவீன உடைகள் அவரிடம் ஏராளமாக இருந்தன . சேலைகளையும் அவர் விரும்பி அணிந்தார் . அந்த வகையில் தற்போது அந்த வீட்டில் ஜெயலலிதா பயன்படுத்திய 10 ஆயிரத்து 438 உடைகள் உள்ளன.கைக்கடிகாரங்கள் , நகைகள் ஆகியவற்றையும் ஜெயலலிதா விரும்பி அணிவதுண்டு . அவர் பயன்படுத்திய 14 நகைகள் போயஸ் இல்லத்தில் உள்ளன . அவற்றின் மொத்த எடை 4.37 கிலோ ஆகும் . வெள்ளி பொருட்களை ஜெயலலிதா ஏராளமாக பயன்படுத்தி உள்ளார் . 867 வெள்ளி பொருட்கள் அங்கு உள்ளன . அவற்றின் மொத்த எடை 601.4 கிலோ ஆகும் . சமையல் அறையில் 6 ஆயிரத்து 514 பாத்திரங்கள் உள்ளன . வீடு முழுக்க 556 படுக்கைகள் மற்றும் இருக்கைகள் உள்ளன . 162 சிறு வெள்ளி பொருட்களும் இருக்கின்றன . ஒப்பணைகள் செய்வதிலும் ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு . ஒப்பணை பொருட்களை அதிகம் வைத்திருந்தார் . தற்போது அந்த வீட்டில் ஜெயலலிதா பயன்படுத்திய 108 ஒப்பணை பொருட்கள் உள்ளன . அவர் பயன்படுத்திய 29 போன் மற்றும் பொபைல் போன் இருக்கின்றன . ஜெயலலிதாவுக்கு தினமும் காலையும் , மாலையும் பூஜை செய்து இறை வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது . பூஜைக்காக அவர் பயன்படுத்திய 15 பொருட்கள் பூஜை அறையில் உள்ளன . அந்த பங்களா முழுவதும் 10 இடங்களில் ரெப்ரி ஜிரேட்டர்கள் உள்ளன . 6 இடங்களில் சுவர் கடிகாரம் மாட்டப்பட்டுள்ளது . பங்களாவின் பல்வேறு பகுதிகளிலும் 11 தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கின்றன . வீடு முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டதாகும் . அந்த வகையில் 38 ஏர்கண்டிஷ்னர்கள் இருக்கின்றன . மொத்தத்தில் 3 அடுக்குகள் கொண்ட அந்த இல்லத்தில் மொத்தம் 32 ஆயிரத்து 700 அசையும் பொருட்கள் இருக்கின்றன.
இதில் ஜெயலலிதா பெற்ற 394 நினைவு பரிசுகளும் அடங்கும் . அசையா சொத்துக்களாக வேதா இல்லத்தின் மற்றொரு பகுதியில் தோட்டம் அமைந்துள்ளது.அந்த தோட்டத்தில் 2 மாமரங்கள் இருக்கின்றன.ஒரு பலா மரம் , 5 தென்னை மரங்கள் , 5 வாழை மரங்களும் இருக்கின்றன . ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்ட பிறகு இவை அனைத்தையும் பொதுமக்கள் கண்டு களிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஜெ.ஜெயலலிதா என்ற பெயரில்
அறக்கட்டளை உருவாக்கம்…ஜெயலலிதா வீட்டையும் , அவர் பயன்படுத்திய பொருட்களையும் பாதுகாப்பதற்காக , புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறநிறுவனம் ” என்ற அறக்கட்டளை கடந்த மே மாதம் 21 – ந் தேதி உருவாக்கப்பட்டது . இதற்காக அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது . அந்த அறக்கட்டளையில் முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ , நிதி மற்றும் செய்தி துறை செயலாளர்கள் , செய்திதுறை இயக்குனர் , அருங்காட்சியகங்கள் இயக்குனர் , பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் . மேலும் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட 4 உறுப்பினர்களும் அந்த அறக்கட்டளையில் உள்ளனர் . ரூ .68 கோடி செலுத்தியது இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை ரூ .68 கோடி இழப்பீடு செலுத்தி தமிழக அரசு
அரசுடமையாக்கி உள்ளது.அரசு வழங்கி உள்ள ரூ .68 கோடியில் ரூ .36 கோடி வருமான வரி இழப்பீட்டுக்கு செல்லும் மீதமுள்ள ரூ .32 கோடியை வாரிசுதாரர்கள் உரிமையியல் கோர்ட்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஒப்படைக்கப்படுகிறது தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து , ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தற்போது முழுமையாக அரசு வசம் வந்துள்ளது . தற்போது அந்த வீட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை பராமரித்து வருகிறது . அடுத்த கட்டமாக அந்த வீடு , ” புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறநிறுவனம் ” அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட் உள்ளது . இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . அறக்கட்டளை வசம் வந்த பிறகு ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது…..

ஆனால், இந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் வழக்கு தொடுத்தனர். ஜெயலலிதாவின் வாரிசுகளாக அவர்கள் இருவர் இருப்பதாகவும், தங்களது பாட்டிக்கும் அந்த சொத்தில் உரிமை இருப்பதால் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் தனது அப்பில் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: